கணவரைப் பிரிந்தார் கேட் வின்ஸ்லெட்

By Staff

Kate Winslet and Sam Mendes
டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் தனது 7 வருட மண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். கணவரும், இயக்குநருமான சாம் மென்டஸிடமிருந்து அவர் விலகி விட்டார்.

இதை கேட்டின் சட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிரிவு இங்கிலாந்தில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இருவரும் அப்படி இணை பிரியாமல் இருந்து வந்த ஜோடி ஆவர்.

இந்தப் பிரிவு சுமூகமாகவும், பரஸ்பர ஒப்பந்தங்களுடனும் கூடியதாகும் என்று கேட் - மென்டஸின் சார்பில் சட்ட நிறுவனம் ஷில்லிங்க்ஸ் தெரிவித்துள்ளது.

34 வயதாகும் கேட் வின்ஸ்லெட் ஹாலிவுட் படமான டைட்டானிக் மூலம் திரையுலகின் புகழ் உச்சிக்கு போனவர். கடந்த ஆண்டு தி ரீடர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

44 வயதாகும் மென்டஸ் புகழ் பெற்ற நாடக இயக்குநராவார். அமெரிக்கன் பியூட்டி என்ற படத்தை இயக்கியதற்காக 1999ம் ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.

கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் கரீபிய தீவில் இவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இது கேட் வின்ஸ்லெட்டுக்கு 2வது திருமணமாகும். அவருடைய முதல் திருமணம் (கணவர் இயக்குநர் ஜிம் திரப்லீடன்) 2001ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

முதல் திருமணம் மூலம் கேட்டுக்கு மியா என்ற 9 வயது மகளும், 2வது திருமணம் மூலம் ஜோ என்ற 6 வயது மகனும் உள்ளனர்.

விவாகரத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து குழந்தைகளை வளர்க்கவுள்ளதாக கேட் - மென்டஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விவாகரத்து நடைமுறைகளை இருவரும் தொடங்கி விட்டனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X