மன்றோ வழியில் லின்ட்சே!

By Staff

Lindsay Lohan
மர்லின் மன்றோ ஸ்டைலில், முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஹாலிவுட் ஹாட் ஸ்டார் லின்ட்சே லோஹன்.

1962ம் ஆண்டு மறைந்த ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ கொடுத்த முழு நீள கவர்ச்சிப் படம் அந்தக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மன்றோவைப் போலவே லின்ட்சே லோஹனும் கவர்ச்சிகரமாக நியூட் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐ நோ ஹூ கில்ட் மி படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கவர்ச்சிப் புயலை ஏற்படுத்தியவர் லோஹன். கவர்ச்சிகரமாக மட்டுமே நடிப்பது என்ற லட்சியத்துடன் இருப்பவர். சமீபத்தில் நியூயார்க் மேகசின் என்கிற அமெரிக்க இதழுக்காக இப்படி முழு நீள நிர்வாண போஸ் கொடுத்துள்ளாராம் லின்ட்சே.

இந்தப் படங்களை எடுத்தவர் பிரபல புகைப்படக்காரர் பெர்ட் ஸ்டெர்ன். இதில் விசேஷம் என்னவென்றால், மன்றோவின் நிர்வாணப் படத்தை 1962ம் ஆண்டு எடுத்தவரும் இதே பெர்ட்தான்.

1962ம் ஆண்டு பெல் ஏர் என்ற ஹோட்டலில் வைத்து மன்றோவின் நிர்வாணப் படங்களை எடுத்தார் பெர்ட். அந்தப் புகைப்படங்கள் அமெரிக்காவில் பெரும் பிரபலமாயின. இதுவரை எடுக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் புகைப்படங்களிலேயே அதுதான் அழகானது என்றும் வர்ணிக்கப்படுகிறது.

மேலும் மன்றோ கடைசியாக போஸ் கொடுத்ததும் அதுதான். இந்தப் புகைப்படங்கள் எடுத்த ஆறே வாரத்தில் மன்றோ மர்மமான முறையில் இறந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.

மன்றோவைப் புகைப்படம் எடுத்த அதே புகைப்படக்காரரை வைத்து லின்ட்சே கொடுதுள்ள நிர்வாணப் புகைப்படங்கள், ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X