படமான மடோனா!

By Staff

Madonna
பாப் அழகி மடோனாவின் வாழ்க்கை, டாக்குமென்டரியாகியுள்ளது. இதை படமாக்கியுள்ளவர் அவரது வீட்டு தோட்டக்காரர் என்பதுதான் விசேஷம்.

பாப் உலகின் அசைக்க முடியாத அரசியாக இருப்பவர் மடோனா. பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்பட பலர் இந்த களத்தில் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தாலும், மடோனாவின் இடத்தை யாரும் இன்னும் பிடிக்கவில்லை.

தற்போது மடோனாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது வீட்டுத் தோட்டக்காரரான நாதன் ரிஸ்மேன் டாக்குமென்டரி படமாக எடுத்துள்ளார். ஐ அம் பிகாஸ் வி ஆர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தைப் பார்த்த மடோனா, நாதன் சிறப்பாக படமெடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

பிரில்லியன்ட் என்பதுதான் நாதனின் படத்தைப் பார்த்து மடோனா பாராட்டிய முதல் வார்த்தை. தொடர்ந்து அவர் கூறுகையில், ரிஸ்மேன் எனது தோட்டக்காரர். அருமையாக இயக்கியுள்ளார். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த அற்புதமான மனிதர்களுள் ரிஸ்மேனும் ஒருவர். சிறப்பாக செய்துள்ளார்.

தோட்டக்காரராக மட்டுமல்லாமல் எனது குழந்தைகளையும் அவர் நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவரிடம் மனிதாபிமானம் நிறைய இருக்கிறது. யாருக்குமே அவரைப் பிடித்துப் போய் விடும்.
இந்தப் படத்தைக் கூட எனது குழந்தைகளுக்காகத்தான் அவர் உருவாக்கியுள்ளார். அதை எனக்கும் அனுப்பி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது, சூப்பராகவே இயக்கியுள்ளார் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் மடோனா.

எனது புகைப்படத் தொகுப்புகளை ஒருமுறை என்னிடம் அவர் காட்டியபோது இதையெல்லாம் டாக்குமென்டரியாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். பிறகு அவரைப் பார்த்து ஏன் நீங்களே இதை செய்யக் கூடாது என்று கேட்டேன். அவரும் சட்டென்று சரி என்றார். இப்போது அந்த டாக்குமென்டரியும் உருவாகி விட்டது என்கிறார் மடோனா.

ரிஸ்மேன், வெறும் தோட்டக்காரராக இல்லாமல், 'பூந்தோட்டக் காவல்காரராகவும்' இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X