மகனுக்காக படம் எடுக்கும் ஜூலி!

By Staff

Angelina
ஹாலிவுட் ஹாட் ஸ்டார் ஏஞ்செலினா ஜூலி தனது மகன்களுக்காக ஒரு படம் தாயரித்து வருகிறார். இது முழுக்க முழுக்க எனது மகன்களுக்காக எடுக்கப்படும் படம் என்கிறார் பெருமையுடன்.

படத்திற்கு தி சேலஞ்சிங் என்று பெயரிட்டுள்ளார் ஜூலி. இந்தப் படத்தில் தொழில்முறை கொலைகாரி வேடத்தில் நடிக்கிறார் ஜூலி. கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் படத்திலிருந்து இந்த கேரக்டரை வாங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனது தத்துப் பையன் மட்டாக்ஸ் மற்றும் பாக்ஸ் ஆகிய மகன்களுக்காக இந்தப் படத்தை எடுக்கிறார் ஜூலி. இந்தப் படத்தை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலான வயதில் அவர்கள் இல்லை என்றாலும் கூட இது எனது மகன்களுக்கான படம் என்கிறார் ஜூலி.

இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் நான் ஒரு கொலைகாரியாக வருகிறேன். பல கொலைகாரர்களை உருவாக்கும் பயிற்சியாளராகவும் நடிக்கிறேன். இது எனது மகன்களை நிச்சயம் குஷிப்படுத்தும் என கருதுகிறேன்.

எனது மகன்களுக்கு ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கிறது. எனவேதான் இப்படி ஒரு அதிரடிப் படத்தை எடுக்க தீர்மானித்தேன் என்கிறார் ஜூலி.

பாசக்கார பயலுக போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X