காமரூன் படம் பெரிய 'டப்பா'!

மிக மோசமான ஹாலிவுட் படங்களில் ஒன்று என்றும் இது தேர்வாகியுள்ளது.
பட்டன் பட்டன் என்ற ரிச்சர்ட் மாதேசன் என்பவர் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் தி பாக்ஸ். சமீபத்தில்தான் இது அமெரிக்காவில் ரிலீஸானது.
இப்படம் ஹாலிவுட் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து சினிமாஸ்கோர் என்ற ரசிகர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் இதுவரை வந்த ஹாலிவுட் படங்களிலேயே மோசமானது தி பாக்ஸ் படம்தான் என்று தெரிய வந்துள்ளதாம்.
கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான ஹாலிவுட் படங்களில் பக், உல்ப் கிரீக், டார்க்னஸ் ஆகிய படங்கள்தான் மோசமானவை என்று முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தி பாக்ஸ் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
படத்தின் பெயரும் டப்பா, படமும் டப்பாவா...??


Click it and Unblock the Notifications











