ஹாலி பெர்ரிக்கு பெண் குழந்தை!

41 வயதாகும் ஹாலி பெர்ரியும், கேப்ரியல் ஆப்ரியும் 2005ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கேப்ரியலுக்கு வயது 32தான். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, தொடர்ந்து இப்படியே பழகிக் கொண்டிருக்கும் யோசனையில் இருப்பதாக 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஹாலி.
இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிகத்தார் ஹாலி. அதன் பிறகு தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை குறித்து அவ்வப்போது ஆவலுடன் பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள செடர்ஸ் - சினாய் மருத்துவ மையத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை அழகான பெண் குழந்தை பிறந்தது.
தனக்கு மகள் பிறந்திருப்பது குறித்து ஹாலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்காகத்தான் நானும், ஆப்ரியும் காத்திருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். இனி அடுத்து 7 மாதங்களுக்கு நானும், ஆப்ரியும் மிகவும் பிசியாக இருப்போம் என்று கூறியுள்ளார் ஹாலி.
திருமணம் குறித்து ஹாலியிடம் கேட்டால், அந்த ஐடியா இன்னும் வரவில்லை. திருமணத்தை விட இந்த உறவில் நான் மிகவும் சவுகரியமாக இருக்கிறேன் என்கிறார் ஹாலி.
ஹாலி ஏற்கனவே இரு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











