For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விநாயகரை அசிங்கமாக சித்தரித்த நடிகர் ஜிம் கேரி, என்பிசி டிவிக்கு இந்துக்கள் கண்டனம்

  By Sudha
  |

  Jim Carrey
  விநாயகப் பெருமானை அசிங்கமான முறையில் சித்தரித்த என்பிசி தொலைக்காட்சி மற்றும் நடிகர் ஜிம் கேரிக்கு இந்துக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  என்பிசியின் இந்த செயலை அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல இந்து மதத் தலைவர் ராஜன் ஜெட் கண்டித்துள்ளார்.

  என்பிசி டிவியின் சனிக்கிழமை இரவு லைவ் என்ற நிகழ்ச்சியில் தி ரேத் ஆப் கணேஷா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றது. அதில், ஜிம் கேரி ஷமன் லீ லிஸியஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கீனன் தாம்சன் கிரேடி வில்சன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

  வித்தியாசமான செக்ஸ் நுட்பங்கள் குறித்த தேடலில் ஈடுபடும் பாத்திரத்தில் வருகிறார் கீனன். இதற்காக விநாயகரை வைத்து அசிங்கமான முறையில் அதில் சித்தரித்துள்ளனர். இதுதான் புயலைக் கிளப்பியுள்ளது.

  இதுகுறித்து ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் முதன்மையான கடவுள் விநாயகர். கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகருக்கு முதன்மையான வழிபாட்டு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கடவுளை செக்ஸ் விஷயத்தில் புகுத்தியிருப்பது கோடானுகோடி இந்துக்களை அவமதிக்கும் குற்றச் செயலாகும்.

  இந்துக்களின் மனதை இந்த செயல் புண்படுத்தியுள்ளது. உடனடியாக என்பிசி சானல் தனது இணையதளங்களிலும் பிற இணைப்புகளிலும் இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். இந்த செயலுக்காக ஜிம் கேரி உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

  தங்களது வர்த்தக லாபத்திற்காக உலகின் பழமையான மதத்தின் முக்கியக் கடவுளை இதுபோல கேவலமாக சித்தரித்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. எதிர்காலத்தில் இதுபோல நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள என்பிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெட்.

  ஜெட் மேலும் கூறுகையில், ஹாலிவுட்டினரும், உலகின் பொழுதுபோக்குத் துறையினரும் இந்து மதத்தின் மீது தங்களது கவனத்தை திருப்பி வருவது வரவேற்புக்குரியது. ஆனால் இந்து மதத்தை மதிக்க அவர்கள் முதலில் முன்வர வேண்டும். தங்களது பிரபல்யத்திற்காகவோ அல்லது வர்த்தக நோக்கத்திற்காகவோ இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் இழுப்பதை ஏற்க முடியாது.

  உலகின் மிகவும் பழமையான மதம் இந்து மதம். உலகின் 3வது மிகப் பெரிய மதம். இப்படிப்பட்ட மதத்தின் சிந்தனைகள், தத்துவங்கள், கோட்பாடுகளை கேலி செய்வதை ஏற்க முடியாது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

  எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்திற்குரியவற்றை கேலி செய்வதை யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது.

  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவற்கு முன்பு, உரிய மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை கலந்து ஆலோசித்து செய்வது பொருத்தமானது. இந்து மதம் குறித்தவற்றை விளக்க எத்தனையோ இந்து மதத் தலைவர்கள், அறிஞர்கள் தயாராக உள்ளனர். அவர்களை கலந்து ஆலோசிக்க ஹாலிவுட்டினர் முன்வர வேண்டும் என்றும் ஜெட் கோரியுள்ளார்.

  English summary
  Hindus are disturbed over the portrayal of Lord Ganesh as a sex act on NBC's Saturday Night Live (SNL) and want apologies from all those responsible for it, including actor Jim Carrey and NBC. Distinguished Hindu statesman Rajan Zed, in a statement in Nevada (USA), said that Lord Ganesh was highly revered in Hinduism and was meant to worshipped in temples or home shrines and not to be thrown around loosely in reimagined versions for dramatic effects in TV series for mercantile greed. Such absurd depiction of Lord Ganesh with no scriptural backing was hurtful to the devotees. In a skit on NBC's SNL (Jan 8) titled "The Wrath of Ganesh", Jim Carrey (as erotic shaman Lee Licious) and Kenan Thomson (as Grady Wilson) demonstrate a sexual technique, mocking elephant-headed Lord Ganesh and his trunk in the process. Such trivialization of Lord Ganesh was disturbing and offensive to the one billion Hindus world over, Zed, who is President of Universal Society of Hinduism, said and requested NBC to immediately remove it from all its websites and other links, said Zed.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X