மடோனா மீண்டும் விவாகரத்து

By Staff

Madonna with Guy Ritchie
2வது விவாகரத்துக்குத் தயாராகும் 50 வயது மடோனா!

பிரபல பாப் பாடகி மடோனா- இயக்குநர் கய் ரிட்சியின் 8 ஆண்டு கால திருமண உறவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர்.

கடுமையான சண்டை அல்லது வாக்குவாதம் காரணமாக இருவரும் பிரியவில்லையாம். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமுகமான நட்புணர்வுடன் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மடோனாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இருவருக்குமிடையே சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இப்போது மடோனாவும் ரிட்சியும் முழு மனதுடன் பிரியும் முடிவுக்கு வந்துள்ளனர், என்றார்.

மடோனாவை விட 10 வயது இளையவர் ரிட்சி. ஆனால் வயது வித்தியாசம் தங்கள் திருமணத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை என்றும், சொல்லப்போனால் வாழ்க்கையை சுவாரஸ்மாக்கியிருக்கிறது இந்த முரண்பாடு என்றும் கூறிவந்தார் ரிட்சி.

சமீபத்தில் மடோனாவின் 50வது பிறந்த நாளின்போது கூட, தங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக உள்ளது என கூறியிருந்தார் ரிட்சி.

இப்போது இருவருக்குமே பிரிவு தேவைப்படுவதாகவும், அதன் விளைவுதான் இந்த திருமண முறிவு என்றும் அறிவித்துள்ளனர். இந்த விவாகரத்துச் செய்தியை வெளியிடும் சாக்கில் தங்கள் குடும்ப மரியாதையைக் கெடுத்துவிட வேண்டாம் என்று பத்திரிகைகளுக்கு மடோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மடோனாவுக்கும் ரிட்சிக்கும் கடந்த டிசம்பர் 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ரோக்கோ, பண்டா என இரு மகன்கள் உள்ளனர். மலாவி எனும் பெண் குழந்தையை இருபவரும் தத்தெடுத்தனர்.

இந்த விவாகரத்தால் குழந்தைகள் நிலை என்னவாகும் எனத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X