கணவருக்கு மடோனா ரூ. 450 கோடி ஜீவானம்சம்

By Staff

Madonna
கணவரும், இயக்குநருமான கய் ரிச்சியை விவாகரத்து செய்துள்ள பாப் அரசி மடோனா, அதற்கு ஜீவனாம்சமாக ரூ. 450 கோடியை கொடுத்துள்ளார். இருப்பினும் இருவருக்கும் பிறந்த பிள்ளைகளை யார் வைத்துக் கொள்வது என்பதில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லையாம்.

பாப் உலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்து வருபவர் மடோனா. இவரது கணவர் கய் ரிச்சி. ஆனால் முதல் கணவர் அல்ல. முந்தைய கணவர் ஹாலிவுட் நடிகர் பென். அவரை விவாகரத்து செய்து விட்ட பின்னர் தனது பிட்னஸ் பயிற்சியாளர் கார்லோஸ் லியானுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

லியோன் மூலம் ஒரு மகளைப் பெற்றார் மடோனா. பிறகு லியோனுடன் கொண்டிருந்த தொடர்பை விட்டார். பிறகு கல்யாணம் செய்து கொண்டவர்தான் ரிச்சி

8 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர் ரிச்சியும், மடோனாவும். மடோனாவை விட பத்து வயது குறைந்தவர் ரிச்சி. மடோனாவுக்கு தற்போது வயது 50.

இந்தத் தம்பதிக்கு ரோக்கா என்ற 8 வயது மகன் உள்ளான். இதுதவிர இருவரும் சேர்ந்து டேவிட் என்ற மகனை தத்து எடுத்துக் கொண்டனர்.

எட்டு வருட வாழ்க்கை கசக்கவே ரிச்சியும், மடோனாவும் விவாகரத்துக்கு முடிவு செய்தனர். கடந்த நவம்பர் 21ம் தேதி இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது.

இதையடுத்து இங்கிலாந்து குடும்ப நல சட்டத்தின்படி கணவரும், மனைவியும் சேர்ந்து சம்பாதித்த பணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி தற்போது கய் ரிச்சிக்கு மடோனா ரூ. 450 கோடியை ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.

மேலும், மேற்கு இங்கிலாந்தின், ஆஷ்கோம்ப் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டையும் ரிச்சிக்கே மாற்றி விட்டார் மடோனா.

இதை மடோனாவின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ரோசன்பர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருபபினும் இருவரின் குழந்தைகளையும் யார் வைத்துப் பராமரிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே அதிக அளவிலான ஜீவனாம்சத் தொகை கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் ரோசன்பர்க் கூடுதல் தகவலைத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X