மர்லினின் பலான படம்-1.5 மில்லியனுக்கு ஏலம்!
மறைந்த ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் பலான வீடியோ படம் 1.5 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
கால் மணி நேரம் ஓடக் கூடிய இந்த வீடியோ படத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் மர்லின் மன்றோ ஓரல் செக்சில் ஈடுபடுவதாக உள்ளது.
இந்த வீடியோ படம் 1950களில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளைப் படத்திலிருந்து எடுத்து தனி வீடியோவாக மாற்றப்பட்டுள்ளது. இது நாள் வரை இந்த வீடியோ கிளிப்பிங் அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ வசம் இருந்தது.
இந்தப் படத்தில் மர்லின் மன்றோவுடன் ஓரல் செக்சில் ஈடுபடும் நபர் யார் என்பது, அந்தப் படத்தை இயக்கியவரான எட்கர் ஹூவருக்கே நினைவில்லையாம்.
ஆனால் அந்த நபர் வேறு யாருமல்ல, முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடிதான் என்று சிலர் கூறுகிறார்கள்.
இவ்வளவு பரபரப்பான இந்த வீடியோ, கெயா மார்கன் என்பவர் மூலம் ஏலம் விடப்பட்டது. அதை ஒரு தொழிலதிபர் 1.5 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லையாம்.
1962ம் ஆண்டு மறைந்த மர்லின் மன்றோவுக்கு உலகெங்கும் இன்னும் மவுசு உள்ளது என்பதையே இந்த ஏலம் காட்டுவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications











