போஸ் கொடுக்க 1 மில்லியன் டாலர்!

அமெரிக்காவை சமீபத்தில் பரபப்பில் ஆழ்தத்தியவர் டுப்ரே. இவர் ஒரு கால் கேர்ள். நியூயார்க நகர மேயராக இருந்த எலியட் ஸ்பிட்சருடன் இவர் கும்மாளமும், குதூகலமுமாக இருந்த படங்கள் வெளியானதால் வெட்கப்பட்டுப் போன ஸ்பிட்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதன் காரணமாக டுப்ரேவும் அமெரிக்கா முழுவதும் பாப்புலராகி விட்டார். விடுமா மீடியாக்கள். டுப்ரேவின் பாப்புலாரிட்டையைப் பயன்படுத்தி புகழ் பெற முனைந்த ஹஸ்ட்லர் இதழ், 10 லட்சம் டாலர் பணம் கொடுத்து முழு நிர்வாணமாக போஸ் கொடுக்க டுப்ரேவை புக் செய்து விட்டதாம்.
இதுகுறித்து டுப்ரேவின் ஏஜென்ட் கூறுகையில், ஹஸ்ட்லர் இதழுக்காக நிர்வாண போஸ் கொடுக்க டுப்ரேவை 10 லட்சம் டாலர் கொடுத்து அந்த இதழ் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஷூட் நடக்கும் என்றார்.
இருப்பினும் முதலில் தனது வெப் சைட்டில் டுப்ரேவின் படங்களை உலா விடப் போகிறதாம் ஹஸ்ட்லர். அதன் பிறகுதான் இதழில் படங்கள் இடம் பெறுமாம்.
ஸ்பிட்சருடன் மொத்தமே 15 நிமிடங்கள்தான் செலவிட்டாராம் டுப்ரே. அந்த 15 நிமிடங்கள் மூலம் அவர் உலகப் புகழ் பெற்று விட்டார். இதுதான் டுப்ரேவை அதிக விலை கொடுத்து நிர்வாணப் படம் எடுக்க ஹஸ்டலரைத் தூண்டியதாம்.
இதேபோல விவிட் வீடியோ என்ற நிறுவனம் டுப்ரேவை வைத்து முழு நீள நிர்வாண வீடியோவை எடுக்க ஆர்வமாக உள்ளதாம். இதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
ஆனால் இதுபோன்ற சமாச்சாரங்களில் 'எக்ஸ்பர்ட்' ஆன பிளேபாய், டுப்ரே குறித்து இதுவரை எந்த ஆர்வமும் காட்டாமல் உள்ளதாம்.
காத்திருந்து பாய திட்டமிடுகிறதோ??


Click it and Unblock the Notifications











