மடோனா நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை சரிந்து ஒருவர் பலி

தெற்கு பிரான்ஸில் உள்ள மார்ஷெல் நகரில் உள்ள வெலட்ரோம் ஸ்டேடியத்தில் மடோனாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அந்த ஸ்டேடியத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று அந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இறந்தவரின் உடலையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.
ஸ்டிக்கி அன்ட் ஸ்வீட் என்ற பெயரில் மடோனா தற்போது பிரான்ஸில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மார்ஷெல் நகரில் ஞாயிற்றுக்கிழமை அவர் கச்சேரி செய்யவிருந்தார்.
தற்போது இந்த விபத்தைத் தொடர்நது மடோனாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மடோனா நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேல் பகுதி சரிந்து விழுந்ததால் அதன் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அமெரிக்கர், இன்னொருவர் இங்கிலாந்துக்காரர் ஆவார். கொல்லப்பட்ட நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.


Click it and Unblock the Notifications











