வேலைக்காரி மூலம் குழந்தை: அர்னால்ட் மனைவியைப் பிரிந்ததன் ரகசியம் அம்பலம

பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நேகர். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்தார். தற்போது பதவி விலகிய அவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். இவருக்கு மரியா ஷ்ரிவர் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி மரியா ஷ்ரிவர் திடீரென அறிவித்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்புடன் வாழ்ந்த இத்தம்பதி பிரிய காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு முக்கிய காரணம் அர்னால்டு தனது வீட்டு வேலைக்காரி மூலம் ரகசியமாக குழந்தை பெற்று இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவரது வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் அர்னால்டுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கர்ப்பிணியான அப்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.
ஆனால் அந்த பெண் தற்போது அவரது வீட்டில் வேலை பார்க்கவில்லை. ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். இருந்தாலும் அக்குழந்தையின் பராமரிப்பு செலவு முழுவதையும் அர்னால்டு ஏற்றுள்ளார்.
இந்த விவரம் சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவி மரியா ஷ்ரிவருக்கு தெரியவந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது கணவர் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அறிவித்தார்.
இதை அர்னால்டும் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு வேலைக்காரி மூலம் பிறந்த 10 வயது குழந்தை இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவர்னர் பதவியை விட்டு விலகியதும் அந்த விவகாரம் பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். இதனால் எனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் என் மீது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இதற்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.
எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அனைவரிடமும் உண்மையுடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்", என்றார்.
அர்னால்டு மனைவி மரியா ஷ்ரிவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு தாய் என்ற முறையில் எனக்கு குழந்தைகள் நலன்தான் முக்கியம். அவர்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்க வேண்டும். எங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்க முயற்சி செய்கிறேன். வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











