மறுமணத்தை விரும்பாத ஹீதர்

மெல்ரோஸ் பிளேஸ் படத்தின் நாயகியான ஹீதர் லாக்லியர் சமீபத்தில்தான் தனது கணவரும், ராக் இசைக் கலைஞருமான ரிச்சி சம்போராவை விவாகரத்து செய்தார்.
அதற்கு முன்பு அவர் டிரம் இசைக் கலைஞர் டோமி லீயை மணந்து விவாகரத்து செய்திருந்தார். டோமி லீ வேறு யாருமல்ல, பமீலா ஆண்டர்சனின் முன்னாள் கணவர் ஆவார்.
சம்போராவை விவாகரத்து செய்து விட்ட லாக்லியர் தற்போது ஜேக் வாக்னரை தீவிரமாக காதலித்து வருகிறார். இவர் 2006ம் ஆண்டு தனது மனைவி கிறிஸ்டினாவை விவாகரத்து செய்தவர்.
கடந்த ஒரு வருடமாகவே சம்போராவை காதலித்து வருகிறார் லாக்லியர். இந்த நிலையில் சமீபத்தில் லாக்லியரை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார் வாக்னர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் லாக்லியர்.
மீண்டும் ஒரு திருமணம் செய்யும் மூட் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம் லாக்லியர். இதை வாக்னரே தெரிவித்துள்ளார்.
அவருக்கு சற்று அவகாசம் தேவை. தொடர் திருமணத் தோல்விகள் அவரை புண்படுத்தியுள்ளன. நான் அதற்கு சரியான மருந்தாக இருப்பேன். இருந்தாலும், அவருக்கு அந்த மருந்து இப்போதைக்குத் தேவைப்படவில்லை என்று நினைக்கிறேன் என்கிறார் வாக்னர்.
நல்லது பாஸ்!


Click it and Unblock the Notifications











