டெல்லியில் ஜூலியா ராபர்ட்ஸ்

ஈட், பிரே, லவ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜூலியா ராபர்ட்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் தலைநகர் டெல்லியிலும் நடக்கவுள்ளது. அக்டோபர் முதல் வாரம் வரை டெல்லியில் படப்பிடிப்பு நடக்கிறது.
இதற்காக ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட திரைக் குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தனது இரட்டைக் குழந்தைகளான ஹேஸல் மற்றும் பின்னேயஸுடன் ஜூலியா டெல்லி வந்துள்ளார்.
படப்பிடிப்பு குறித்த விவரங்கள் படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குர்கான் அருகே உள்ள ஒரு ஆசிரமத்தில் வைத்து படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications