நிறைய 'கிட்ஸ்' விரும்பும் கிட்மேன்!

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகைகளில் ஒருவரான கிட்மேனுக்கு குழந்தைகள் மீது நிறைய ஆசை வந்து விட்டதாம்.
டாம் க்ரூஸின் முன்னாள் மனைவியான கிட்மேனுக்கு க்ரூஸ் மூலம் இசபெல்லா, கானர் என இரு குழந்தைகள் உள்ளன.
தற்போதைய கணவரான கீத் அர்பன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் சன்டே ரோஸ் என்ற அழகிய மகளைப் பெற்றெடுத்தார் கிட்மேன். ஆனால் இவை போதாது, இன்னும் நிறையக் குழந்தைகள் வேண்டும் போல உள்ளது என்கிறார் கிட்மேன். இதற்காக நடிப்பைக் கூட விட்டு விட அவர் முடிவு செய்து விட்டாராம்.
கிட்மேன் நடித்த ஆஸ்திரேலியா என்ற படத்தின் பிரிமீயருக்காக குட்டிப் பாப்பா சன்டே ரோஸை வீட்டில் விட்டு விட்டு கணவருடன் வந்திருந்த கிட்மேனுக்கு, விழா முழுக்க குழந்தை ஞாபகமே இருந்ததாம். வீட்டில் 'ஆயா' இருந்தாலும் கூட தாய் பக்கத்தில் இருப்பது போலாகுமா என்கிறார் கரிசனத்துடன்.
தனது எதிர்கால வாழ்க்கை குறித்து கிட்மேன் கூறுகையில், எத்தனை நாட்களுக்கு நான் நடிகையாக இருப்பேன் எனத் தெரியாது. வாழ்க்கையில் ஒரு இடத்திற்கு வ்நது விட்டேன். எனக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்துள்ளது. எனவே .. என்று புன்னகையுடன் தனது நடிப்பு ஓய்வு குறித்து பூடகமாக கூறினார் கிட்மேன்.
ஏற்கனவே ஏஞ்செலீனா ஜூலியும், தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக நடிப்பிலிருந்து விலகுவதாக கூறியிருந்தது நினைவிருக்கலாம். அந்த பாசக்கார தாய் நடிகை வரிசையில் இப்போது கிட்மேனும் இணைகிறார்.


Click it and Unblock the Notifications











