லயிக்க வைக்கும் லியோனா

By Staff

Leona Lewis
பியானோ தெரியம். யார் இந்த லியோனா? என்று மட்டும் இங்கிலாந்தில் போய் யாரிடமும் கேட்டு விடாதீர்கள். இங்கிலாந்து இளசுகளை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் பாப் புயல்தான் லியானோ லூயிஸ். அம்மணியின் அடுத்த 'டார்கெட்' அமெரிக்காவாம்.

இங்கிலாந்தில் இப்போது எங்கு பார்த்தாலும் லியானோவின் இசை அலைதான். அவரது இசைக்கு ஏராளமான இளசுகள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இங்கிலாந்துக்கு அழகான, திறமையான, இளமையான பாடகி கிடைத்துள்ளார் என்று பாராட்டப்படுகிறார் லியானோ.

2006ம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டார் லியானோ. அந்த ஆண்டு நடந்த எக்ஸ் பேக்டர் என்கிற திறமை அறியும் போட்டியில் தனது பாய் பிரண்ட் ஆலோசனையின் பேரில் கலந்து கொண்டார் லியானோ. அதில் அவர் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு லியானோவின் இசை அலை வெகு வேகமாக பரவத் தொடங்கியது.

எக்ஸ் பேக்டருக்குப் பிறகு, எ மொமன்ட் லைக் திஸ் என்ற ஆல்பத்தை கொண்டு வந்தார் லியானோ. இது பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான ஒரே வாரத்தில் 5 லட்சம் கேசட்டுகள் விற்று சாதனை படைத்தன.

லேட்டஸ்டாக ஸ்பிரிட் என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் லியானோ. இது இங்கிலாந்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 8ம் அமெரிக்காவில் ரிலீஸாகிறது. ஸ்பிரிட் மூலம் அமெரிக்க இளசுகளையும் லியானோ அள்ளுவது நிச்சயம் என்கிறார்கள் இசையுலகினர்.

ஸ்பிரிட் ரிலிஸுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார் லியானோ. அப்போது தனது மனம் கவர்ந்த ஓப்ரா வின்பிரேயை சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

இங்கிலாந்தை இம்சித்து வரும் லியானோ விரைவில் அமெரிக்காவையும் அலைக்கழிப்பார் என்பது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X