'ரிங்' .. டபாய்த்த லோஹன்!

ஹாலிவுட் ஹாட் ஸ்டார் லோஹன், தனது இடது கையின் நடு விரலில் இதய வடிவிலான மோதிரத்தை அணிந்துள்ளார்.
தனது தோழி சமந்தா ரான்சனுடன் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் டவுன் ஹோட்டலுக்கு வந்திருந்தபோது மோதிரம் நடுவிரலில்தான் இருந்தது.
பின்னர் இருவரும் கபே டி பாரீஸ் ஹோட்டலுக்கு சேர்ந்து வந்தனர். அப்போது புகைப்படக்காரர்கள் லின்ட்சேவை சூழ்ந்து புகைப்படம் எடுக்க எத்தனித்தனர்.
அப்போது நைசாக தனது மோதிரத்தை நடு விரலிருந்து நிச்சயதார்த்தத்தின்போது மாட்டும் விரலுக்கு மாற்றி விட்டார் லோஹன்.
இது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா அல்லது, அல்லது சமந்தாவுடன் அவர் கொண்டு 'காதலை' வெளிப்படுத்துகிறாரா என்று ஹாலிவுட் வாய்கள் மெல்ல ஆரம்பித்துள்ளன.
சமந்தாவும், லோஹனும் 'நெருங்கிப்' பழகுவதாக ஏற்கனவே செய்திகள் உள்ளன. இந்த நிலையில், இருவரும் மிக மிக நெருங்கி விட்டதாக இப்போது செய்திகள் கூறுகின்றன.
Comments


Click it and Unblock the Notifications