டைட்டானிக்கை 'மூழ்கடித்த' மம்மா மியா!

மெரில் ஸ்டிரீப் நடித்து வெளியாகியுள்ள படம் மம்மா மியா. யுனிவர்சல் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படம் 1998ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தின் வசூலை முறியடித்து இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
டைட்டானிக் படம் 22 வாரங்களில் எட்டிய வசூலை விட கூடுதலாக அதாவது, 107.7 மில்லியன் டாலர்களை மம்மா மியா எடுத்துள்ளது.
அதேபோல மம்மா மியா படத்தின் டிவிடி விற்பனையும் அமோகமாம். வெளியான முதல் நாளே 10.7 லட்சம் டிவிடிக்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.
மம்மா மியா வசூலில் சக்கை போடு போட்டாலும் கூட, டைட்டானிக் படத்தின் உலகளவிலான 1.8 பில்லியன் டாலர் வசூல் சாதனை இன்னும் அப்படியேதான் உள்ளது.
மம்மா மியா படம், இன்றைய உலகப் பொருளாதார கஷ்டங்களை மறந்து, செலவே இல்லாமல், இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருந்து விட்டு வரும் வகையிலான ஜாலியான படம் என்கிறார் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டேவிட் கோஸே.


Click it and Unblock the Notifications











