மெக்கார்ட்னி-மில்ஸ் விவாகரத்து

By Staff

Paul McCartney with Heather Mills
இங்கிலாந்து பாப் பாடகரும், பல கோடி சொத்துக்களுக்கு அதிபருமான பால் மெக்கார்ட்னியும், அவரது மனைவி ஹீதர் மில்ஸும் விவாகரத்து செய்துள்ளனர். மில்ஸுக்கு ஜீவானம்சமாக 25 மில்லியன் பவுண்டு (50 மில்லியன் டாலர்) பணம் கொடுக்க சம்மதித்துள்ளார் மெக்கார்ட்னி.

இங்கிலாந்தின் பிரபல பீட்டில்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்தவர் பால் மெக்கார்ட்னி. இவரது மனைவி ஹீதர் மில்ஸ். இருவரும் கடந்த 204ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமூகமாக போய்க் கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரடு முரடான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவே லண்டன் உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தனர். மெக்கார்ட்னியுடன் இணைந்து வாழ விரும்பவில்லை என்றும், தனக்கு விவாகரத்து வழங்குமாறும், ஜீவனாம்சமாக மெக்கார்ட்னி 125 மில்லியன் பவுண்ட் பணம் தர வேண்டும் எனவும் கோரியிருந்தார் மில்ஸ்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் அழைத்து சமரசம் பேசினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜீவனாம்சமாக மில்ஸுக்கு 50 மில்லியன் டாலர் தர மெக்கார்ட்னி ஒத்துக் கொண்டார்.

இதன் மூலம் மெக்கார்ட்னி, மில்ஸின் குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X