ஷகீரா-நடால் 'குண்டக்க மண்டக்க'!

கடந்த மாதம் நடாலும், ஷகீராவும் மியாமியில் படு ஜாலியாக இருந்தார்களாம். அதேபோல கடந்த மாதம் இருவரும் பார்சிலோனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடியாக வந்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். படு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு காதுகளில் கிசுகிசுத்தபடி அவர்கள் சாப்பிட்டதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
ஷகீரா சமீபத்தில் தனது 33வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருடன் இருந்தவர் அவரது காதலர் அன்டோனியா டி லா ருவா. நடாலுக்கு 23 வயதாகிறது. இவருக்கும் ஒரு காதலி உண்டு. அவரது பெயர் மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோ. சுருக்கமாக சிஸ்கா என்பார்கள். இவர்கள் இருவரும் 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷகீராவையும், நடாலையும் சேர்த்து வதந்திகள் கிளம்பியுள்ளன.
இதற்கிடையே ஜிப்சி என்ற பெயரில் ஒரு சிங்கிள் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் ஷகீரா. இதில் ஷகீராவுடன், நடாலும் இணைந்துள்ளார். ஒரு பாலைவனத்தில் இதற்கான காட்சி படமாக்கப்பட்டபோது கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் ஷகீரா தோன்றி நடித்தாராம்.
அடுத்த மாதம் இந்த வீடியோ வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











