இந்தியாவை முதலில் சந்திக்கும் 'பாண்ட்'!

அந்தப் படம் ஜேம்ஸ்பாண்ட் 007ன் குவாண்டம் ஆப் சோலேஸ்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருவது தெரிந்த சங்கதி. சுமாரான பாண்ட் படம் கூட வசூலில் சக்கை போடு படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாராகும் இந்தப் பட வரிசையில் கடைசியாக வெளியான படம் காஸினோ ராயல்.
இதன் இரண்டாம் பாகம் குவான்டம் ஆஃப் சோலேஸ் எனும் பெயரில் நவம்பர் மாதம் 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
காஸினோ ராயலில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த டேனியல் க்ரேக்தான் இதிலும் பாண்ட் 007-ஆக வருகிறார். அவருடன் ஆல்கா குரிலென்கோ, கெம்மா ஆர்டர்டென் நடித்துள்ளனர். மார்க் பார்ஸ்டர் இயக்கியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்தில் திரையிடப்படுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே இந்தப் படம் இந்தியாவில் ரிலீசாகிறது. அதன் பின்னர்தான் 14-ம் தேதி இப்படம் உலகமெங்கும் ரிலீசாகிறது.
இதுகுறித்து இந்தியாவில் இப்படத்தை வெளியிடும் சோனி நிறுவன நிர்வாக இயக்குனர் கெர்ஸி தாருவாலா கூறுகையில், ஜேம்ஸ் பாண்ட் படம் வந்தால் மற்ற நாட்டு ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள்தான் குதூகலம் அடைகிறார்கள். இம்முறை இந்திய ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்கு மரியாதை செய்யும் விதத்தில் அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரப்போகிறோம்.
ஹாலிவுட் மற்றும் உலகின் பிற பகுதிகளில் படம் ரிலீசாவதற்கு ஒரு வாரம் முன்பாகவே இந்தியாவில் பாண்ட் படத்தை ரிலீஸ் செய்கிறோம், என்றார்.
சில தினங்களுக்கு முன் பாண்ட் பட நாயகி ஆல்கா குரிலென்கோ இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











