வின்னி மண்டேலாவாக நடிக்கும் ஜெனிபர் ஹட்சன்

வின்னி என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் மண்டேலாவின் சர்ச்சைக்குரிய முன்னாள் மனைவியான வின்னியின் கேரக்டரில் ஜெனிபர் ஹட்சன் நடிக்கிறார்.
வின்னி மண்டேலா - ஏ லைப் என்ற பெயரிலான வி்ன்னியி்ன் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மே 30ம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தொடர்ந்து கேப்டவுன், டிரான்ஸ்கி, ராபன் தீவு ஆகியவற்றில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
ஏற்கனவே மார்கன் ப்ரீமேன், மண்டலோ குறித்த படத்தில் நெல்சன் மண்டேலா வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் வின்னி குறித்த படமும் தயாராவது குறிப்பிடத்தக்கது.
வின்னி படத்தின் தீம் பாடலையும் ஜெனிபர் ஹட்சனே பாடப் போகிறாராம்.
இப்படம் குறித்து ஜெனிபர் கூறுகையில், வின்னி மண்டேலா ஒரு அசாதாரணமான பெண்மணி ஆவார். அவர் வேடத்தில் நடிக்கவிருப்பது பெருமையாக உள்ளது என்றார்.
நெல்சன் மண்டேலாவும், வி்ன்னியும் 1996ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பின்னர் 2003ம் ஆண்டு பண மோசடி தொடர்பாக சிறைத் தண்டனைக்குள்ளானார் வின்னி.


Click it and Unblock the Notifications











