உலக அகதிகள் தின நிகழ்ச்சி- கண்ணீர் விட்ட ஏஞ்செலீனா ஜூலி

இன்று உலக அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி வாஷிங்டனில் ஐ.நா. அகதிகள் ஏஜென்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஐ.நா. அகதிகள் ஏஜென்சியின் நல்லெண்ணத் தூதரான ஜூலியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளின் எண்ணிக்கை, அவர்களின் அவல நிலை உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசப்பட்டது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜூலிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் காணப்பட்டார் ஜூலி.
பின்னர் அவர் பேசுகையில், அகதிகளை நாம் எண்ணிக்கையில் சொல்லக் கூடாது. அவர்கள் தாய்மார்கள், மகள்கள், தந்தைகள், மகன்கள்.
அகதிகளின் நிலை மிகவும் உருக்கமானது. பல அகதிகளை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்க்கையை அவர்கள் பெரிய அளவில் மாற்றியுள்ளனர். அவர்களது வாழ்க்கை குறித்து அறிய எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அமெரிக்க நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள அகதிகளின் நல் வாழ்வுக்காக நிறையச் செய்ய முடியும், செய்வார்கள், செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்றார் ஜூலி.


Click it and Unblock the Notifications











