ஜூலி - பிட் ஜோடிக்கு டுவின்ஸ்!

By Staff

Angelina Jolie with Brad pitt
ஹாலிவுட்டின் கவர்ச்சி நாயகிகளில் ஒருவரான உதட்டழகி ஏஞ்செலினா ஜூலி, பிராட் பிட் ஜோடிக்கு விரைவில் இரட்டைக் குழந்தை பிறக்கவுள்ளது. இந்த செய்தியை ஜூலியே உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு வருகை தந்த ஜூலி, தான் இரட்டைக் குழந்தைக்குத் தாயாகப் போகும் சேதியை வெளியிட்டுள்ளார்.

கேன்ஸ் பட விழாவில் ஜூலியும், ஜேக் பிளாக்கும் இணைந்து நடித்துள்ள குங் பூ பான்டா என்ற படம் திரையிடப்படுகிறது. இந்தப் படத்துக்கான பிரிமியருக்கு முன் இருவரும் சேரந்து அளித்த பேட்டியின்போது இந்த சேதியைத் தெரிவித்த பிளாக், தன் சக நடிகர் என்ற முறையில் ஜூலிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

வந்திருந்த மீடியாக்காரர்களுக்கு இந்த தகவலை பிரஸ் நோட்டாகக் கொடுத்த பிளாக், இன்னும் சில தினங்களில் பிட் தம்பதிகள் இதுபோன்ற பல தகவல்களை உங்களுக்குச் சொல்லப் போகிறார்கள் என்றார் புன்னகையுடன்.

அதை ஆமோதித்த ஜூலி, உண்மைதான், எனக்கு இரட்டைக் குழந்தை பிறக்கப் போகின்றன. இதைத்தான் பிளாக் இப்போது உங்களுக்குச் சொல்லியிருக்கிறார், என்றார்.

இப்போது பிறக்கப்போவது ஜூலி, பிட் ஜோடிக்கு 5 மற்றும் 6வது குழந்தைகளாகும். தற்போது இவர்களுக்கு மேட்டாக்ஸ், பாக்ஸ், ஜஹாரா, ஷிலோ ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஷிலோ மட்டும் ஜூலி-பிட்டுக்குப் பிறந்த குழந்தை. மற்ற மூவரும் தத்துக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X