போதைப் பொருள் பயன்படுத்தியதாக லிண்ட்சே லோகன் மீண்டும் கைது

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லிண்ட்சே லோகன் (24). போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் இவர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு 30 நாள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையே நன்னடத்தை ஜாமீனில் இவர் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீனில் இருக்கும் போது வாரம் ஒருமுறை போதை மருந்து பரிசோதனை செய்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் மீண்டும் போதை மருந்து பயன்படுத்தி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை மீண்டும் போலீசார் கைது செய்து தண்டனையை அனுபவிக்க சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments


Click it and Unblock the Notifications