கணவருடன் மடோனா கசமுசா?

பாப் தேவதை மடோனாவுக்கும், அவரது கணவர் கய் ரிச்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரியப் போகிறார்கள் என்று பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் இதை மடோனாவின் செய்தித் தொடர்பாளர் லிஸ் மறுத்துள்ளார். மடோனாவுக்கும், கய் ரிச்சிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கலள் என்று கூறியுள்ளார் லிஸ்.
இருப்பினும் மடோனா, கய் இடையே தீவிரமான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு பிளாக்குகளில் செய்திகள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. செய்தித் தாள்கள், மேகஸின்களிலும் இதுதான் செய்தியாக உள்ளது.
கடந்த வாரம் நடந்த ராக் அன்ட் ரோல் ஹால் ஆப் பேம் நிகழ்ச்சியில் மடோனாவின் புகைப்படம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கய் கலந்து கொள்ளவில்லை. மேலும் பிப்ரவரியில் நடந்த ஐ.நா. நிதி சேகரிப்பு விழாவுக்கும் கய் வரவில்லை. இதைக் காரணமாக வைத்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என செய்தி கிளம்பியதாக கூறப்படுகிறது.
கய் ரிச்சிக்கு வயது 39. அவரை விட பத்தே வயது மூத்தவர்தான் மடோனா. சமீப காலம் வரை மடோனா இங்கிலாந்திலும், கய் ரிச்சி அமெரிக்காவிலும் வசித்து வந்தனர். ஆனால் இப்போது இருவரும் லண்டனில் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர் என்றும் லிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நல்லா இருந்தா சரிதான்!


Click it and Unblock the Notifications











