»   »  ரஜினியின் 2.ஓ... முதல் முறையாக ஹாலிவுட்டில் தொடங்கியது தமிழ்ப் பட புரமோஷன்!

ரஜினியின் 2.ஓ... முதல் முறையாக ஹாலிவுட்டில் தொடங்கியது தமிழ்ப் பட புரமோஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தின் விளம்பம் பிரமாண்டமாக ஹாலிவுட்டில் தொடங்கியுள்ளது. அது ரஜினியின் 2.ஓ.

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ 400 கோடிகளுக்கும் மேல் செலவு செய்து உருவாக்கும் படம் 2.ஓ.

இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைத் தவிர மற்ற அனைத்தும் முடிவடைந்துவிட்டன.

விளம்பரங்கள் ஆரம்பம்

விளம்பரங்கள் ஆரம்பம்

2.ஓ படத்தின் புரமோஷன் வேலைகளை படம் வெளியாவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில் தொடங்கியுள்ளது லைகா.

உலகப் பயணம்

உலகப் பயணம்

2.ஓ படத்தை உலகெங்கும் 100-க்கும் அதிகமான நாடுகளில் வெளியிடவிருப்பதால், உலகம் முழுவதும் பயணம் செய்து விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதனை லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம் அறிவித்துள்ளார்.

ஹாட் ஹேர் பலூன்

ஹாட் ஹேர் பலூன்

அடுத்து ஹாலிவுட்டில் மிகப் பிரமாண்டமான ஒரு ஹாட் ஹேர் பலூனை பறக்க விட்டுள்ளனர். அதில் ரஜினி - அக்ஷய் குமார் படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் முறை

முதல் முறை

ஒரு தமிழ்ப் படத்தின் விளம்பரம் இத்தனை பிரமாண்டமாக ஹாலிவுட்டில் வைக்கப்படுவது இதுவே முதல் முறை. கபாலிக்கு செய்த விளம்பரங்களை விட பல மடங்கு அதிகமாக இந்தப் படத்துக்கு செய்வார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த விளம்பரம்.

English summary
Lyca Production has started its promotions for Rajinikanth's 2.O movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil