பாக். வெள்ள நிவாரணத்திற்கு ஏஞ்செலீனா ஜூலி 1 லட்சம் டாலர் நிதியுதவி

மேலும்,உலக மக்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக விளங்கும் ஜூலி, தனது ரசிகர்கள் பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். தற்போது அவரே 1 லட்சம் டாலர் நிதியுதவியை அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஏற்கனவே ஹெய்தி பூகம்பத்தின்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூலியும், அவரது கணவர் பிராட் பிட்டும் உதவி செய்தனர். அதேபோல ஆப்கானிஸ்தானில் மகளிர் பள்ளி கட்ட 75,000 டாலர் உதவி செய்தனர்.
இலங்கையில் நடந்த ஈழப் போரில் சிக்கி வீடு, வாசல், உறவுகள், உடல் உறுப்புகளை இழந்த அப்பாவி தமிழ் மக்களைத் தவிர உலகம் முழுவதும் ஜூலியும், பிராட் பிட்டும் உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











