எம்மாவுக்கு ஹாலிவுட் 'அலர்ஜி'!

By Staff

Emma watson
ஹாரி பாட்டர் புகழ் எம்மா வாட்சன், ஹாலிவுட் படங்களில் நடிக்க தனக்கு ஆர்வமோ, திட்டமோ இல்லை என்று கூறியுள்ளார். ஹாலிவுட்டின் ஜொலி ஜொலிப்பும், ஆடம்பரமும் தன்னை இன்னும் கவரவில்லை என்கிறார் எம்மா.

18 வயது புயலான எம்மா, ஹாலிவுட்டில் எனது வயதுடைய நடிகைகளையெல்லாம் கிட்டத்தட்ட 'அம்மணக்க டொம்மணக்க' ரோல்களில்தான் நடிக்க வைப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எனவேதான் ஹாலிவுட்டில் நிரந்தரமாக புகும் ஆர்வமும் எனக்குப் பிறக்கவில்லை என்கிறார் பளிச்சென.

ஆனால் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் எம்மா. இதற்காக விரைவில் கலிபோர்னியா செல்லவுள்ளார். ஆனால், இந்தப் படத்துடன் சரியாம், தொடர்ந்து நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

ஹாலிவுட்டில் நிரந்தரமாக நடிப்பது குறித்து என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இங்கிலாந்துதான் என்னைப் பொறுத்தவரை சொர்க்கம். இதை விட்டுப் போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இங்கே எல்லோருமே அற்புதமான மனிதர்கள், அருமையான சூழல் இங்குதான் உள்ளது. இதை விட சிறந்த இடம் ஹாலிவுட் என்று என்னால் சொல்ல முடியாது என்கிறார் எம்மா.

ஹாலிவுட்டுக்கும், இங்கிலாந்து சினிமாவுக்கும் நிறைய அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. எனவே என்னால் நிரந்தரமாக ஹாலிவுட்டுக்குப் போவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் எம்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X