மடோனாவுக்கு ரிச்சி தடை

By Staff

Madonna
லண்டனில் உள்ள தனது வீட்டில் மடோனா வந்து தங்க அவரது முன்னாள் கணவர் கய் ரிச்சி திடீர் தடை போட்டுள்ளார். இதனால், கிறிஸ்துமஸை தனது குழந்தைகளோடு லண்டனில் கழிக்கத் திட்டமிட்டிருந்த மடோனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மடோனாவும், ரச்சியும் விவாகரத்து செய்து விட்டனர். விவாகரத்து உடன்பாட்டின்படி, ரிச்சிக்கு ரூ. 450 கோடி ஜீவனாம்சத்தையும் வழங்கியுள்ளார் மடோனா. அதில், இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் உள்ள ஆஷ்கோம்பே பண்ணை இல்லமும் ஒன்று.

விவாகரத்துக்கு முன்பு மடோனாவும், ரிச்சியும், தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமாக பொழுதுபோக்கிய இடம் இது. தற்போது இந்த வீட்டை ரிச்சிக்கு கொடுத்து விட்டார் மடோனா.

இந்த வீடு தனக்கு பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்தும் என்பதால் இதை வேண்டாம் என்று ரிச்சியிடம் வழங்கி விட்டார் மடோனா.

ஆனால் தங்களது குழந்தைகளான லூர்துஸ், ராக்கோ, டேவிட் ஆகியோரின் சந்தோஷத்திற்காக இந்த வீட்டில் கிறிஸ்துமஸை கொண்டாட திட்டமிட்டிருந்தார் மடோனா. இதற்காக ரிச்சியுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை அந்த ஒரு நாள் மட்டும், குழந்தைகளுக்காக மறக்கவும் அவர் முன்வந்தார்.

ஆனால் அதற்கு ரிச்சி தடை போட்டு விட்டார். மடோனா தாராளமாக இந்த வீட்டுக்கு வரலாம், ஆனால் வந்து சமைப்பது, சாப்பிடுவது, இரவு தங்குவது போன்றவற்றுக்கு அவர் திட்டமிட்டால் அது டூ மச். அதை என்னால் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக கூறியுள்ளார் ரிச்சி.

இதுகுறித்து ரிச்சிக்கும், மடோனாவுக்கும் நெருக்கமான வட்டாரம் கூறுகையில், மடோனா ஆஷ்கோம்பே இல்லத்திற்கு வருவதை தடுக்க ரிச்சி விரும்பவில்லை. ஆனால் இரவு தங்குவது, குழந்தைகளுடன் முன்பு போல சமைத்து சாப்பிடுவது ஆகியவற்றை அவர் விரும்பவில்லை.

பழைய நினைவுகள் மீண்டும் தன் முன் நிழலாடுவதை அவர் விரும்பவில்லை. குறிப்பாக சமையலறையில் மடோனாவை மீண்டும் பார்க்கவே அவர் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X