உலகின் மிக ஆழமான மரியானா கடல் பகுதியில் ஜேம்ஸ் கேமரூன்!

இந்தப் படத்துக்காக சேலஞ்சர் டீப் பகுதியில் 6.8 மைல் ஆழத்துக்கு பயணம் செய்கிறார் கேமரூன். அவதார் படத்தின் களமான பண்டோரா கிரகத்தின் ஆழ்கடல் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது.
அவதாரின் இரண்டாம் பாக்த்தைப் படமாக்குவதற்காக மிகுந்த பொருள்செலவில் கப்பல் ஒன்றை தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளார் கேமரூன். ஆஸ்திரேலியாவில் தயாராகும் இந்தக் கப்பலின் பாதிப் பணிகள் முடிந்துவிட்டன. முழுமையடைந்ததும், கேமரூன் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட சிலர் மட்டும் இந்தக் கடல் பகுதிக்குள் செல்லப் போகிறார்களாம்.
முழுக்க முழுக்க 3 டியில் உருவாகும் படம் இது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு சேலஞ்சர் டீப் பகுதிக்கு விசிட் அடிக்கும் முதல் நபர் ஜேம்ஸ் கேமரூன் மட்டுமே!
Comments
avatar 2 அவதார் 2 சேலஞ்சர் டீப் ஜேம்ஸ் கேமரூன் மரியானா கடல் challenger deep james cameron mariana trench


Click it and Unblock the Notifications