ஜூலிக்கு மாஜி கணவர் வாழ்த்து

By Staff

Angelina Jolie with Billy Bob
ஹாலிவுட் ஹாட் ஸ்டார் ஏஞ்செலினா ஜூலி கர்ப்பமாகியிருப்பதற்கு அவருடைய முன்னாள் கணவர் பில்லி பாப் தார்ன்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏஞ்செலினா ஜூலி கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கவுள்ளது. இந்த நிைலயில் அவருடைய முன்னாள் கணவர் பில்லி பாப் தார்ன்டன், ஜூலிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்புதான் ஜூலியும், தார்ன்டனும் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் ஜூலி கர்ப்பமாகியிருப்பது மகிழ்ச்சி தருவதாக தார்ன்டன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பில்லி கூறுகையில், ஜூலிக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலியைப் போன்ற தாயைப் பெற்றதற்கு அவருடைய குழந்தைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதேபோல பிராட் பிட்டும் சிறந்த தந்தையாக விளங்குகிறார்.

ஜூலி நல்ல தாயாகவும், மனைவியாகவும் மட்டும் இல்லை. சிறந்த மனித நேயமிக்க பெண்மணியாகவும் திகழ்கிறார். இது எல்லோருக்கும் வந்து விடாது. ஜூலியின் இந்த குணாதிசயம் என்னை வியக்க வைக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மனப்பான்மை அவரிடம் இருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் தார்ன்டன்.

1999ம் ஆண்டு புஸ்ஸிங் டின் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் ஜூலியை சந்தித்தார் தார்ன்டன். 2000மாவது ஆண்டு இருவரும் மணந்து கொண்டனர். 2003ல் இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X