பிரிகிறார்கள் மைக்கேல் ஜாக்ஸன் பெற்றோர்!

தங்களின் 60 ஆண்டு தாம்பத்ய வாழ்க்கையை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர் மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் குடும்பத்தினர்.
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ, தாயார் காத்ரீன் (80). இவர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மைக்கேல் ஜாக்சன் தவிர இவர்களுக்கு மேலும் மகன்களும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற உள்ளனர்.
இதற்கான மனுவை, மைக்கேல் ஜாக்சனின் தாயார் காத்ரீன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் தனது கணவர் ஜோவின் நடவடிக்கைகள் மோசமாக உள்ளன. எனவே, அவருடன் வாழ்ந்த வாழ்க்கை போதும். இப்போது நிரந்தரமாகப் பிரிய விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications