ரேச்சலுக்கு கல்யாணம்!

ரேச்சலுக்கு 38 வயதாக இருந்தாலும், ஸ்டோலுக்கு வயது ஜஸ்ட் 26தான். கடந்த இரு வருடங்களாக இவர்கள் காதலர்களாக இருந்து வருகின்றனர். இதுவரை காதலித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு மோதிரத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஸ்டோலுடனான தனது காதல்தான் இதுவரை காதலித்தவர்களிலேயே உண்மையான காதலாக இருக்கிறது என்று மனம் திறந்து கூறியிருக்கிறார் ரேச்சல். அந்த அளவுக்கு ஸ்டோல், தனது இதயத்தையும், அன்பையும் 'திருடி' விட்டாராம்.
இதனால்தான் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் ஸ்டோல் மீது 'மெல்ட்' ஆகி விட்டாராம் ரேச்சல்.
இருவரும் ஒரு ஐஸ் ஹாக்கி போட்டியின்போதுதான் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனராம். பார்த்தவுடன் காதல் வகையான காதலாம் இவர்களுடையது. அன்று முதல் இருவரும் நெருங்கிப் பழகி வருகின்றனர். ஸ்டோல் மீது உயிரையே வைத்துள்ளாராம் ரேச்சல்.
இவர்களது திருமணத்திற்கு இரு தரப்பிலும் பச்சைக் கொடி காட்டி விட்டனராம்.
தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள வீட்டில் ரேச்சலும், ஸ்டோலும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் ரேச்சலின் மகள் லெனீ, மகன் லியாம் ஆகியோரும் சேர்ந்து வசிக்கின்றனர். இருவரும் ராடுக்கும், ரேச்சலுக்கும் பிறந்தவர்கள்.
லியாம், இப்பவே, ஸ்டோலுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டானாம். லியாமுக்கு, ஸ்டோல் ஐஸ் ஹாக்கி கற்றும் கொடுத்து வருகிறாராம்.
'கரச்சல்' இல்லாமல் இருந்தால் சரிதான்!


Click it and Unblock the Notifications











