எம்ஜிஎம்மை வாங்கும் சஹாரா பரிவார்!

லக்னோவை மையமாகக் கொண்டு இயங்கும் சஹாரா பரிவார் நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்கிறது. விமானப் போக்குவரத்து, டெலிவிஷன் நெட்வொர்க் என பல துறைகளில் கால்பதித்துள்ள இந்த நிறுவனம் இப்போது படத் தயாரிப்பிலும் இறங்குகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹாலிவுட்டின் பிரபல ஸ்டுடியோவான எம்ஜிஎம்மை விலைக்கு வாங்குகிறது சஹாரா. கடன் பிரச்சினையால் தவித்துவரும் எம்ஜிஎம்மை 2 பில்லியன் டாலருக்கு வாங்க சஹாரா தெரிவித்த விருப்பத்தை எம்ஜிஎம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் சஹாராவோ எம்ஜிஎம்மோ வெளியிடவில்லை.
சோனி கன்சார்டியம், புராவிடன்ஸ் ஈக்விட்டி பார்ட்னர்ஸ், டிபிஜி, காம்காஸ்ட் கார்ப்பொரேஷன், டிஎல்ஜே மர்ச்சன்ட் பேங்கிங் பார்ட்னர்ஸ் மற்றும் குவாட்ராங்கிள் குரூப் போன்ற நிறுவனங்கள் எம்ஜிஎம் நிறுவனத்தின் உரிமையாளர்களாக உள்ளனர்.
இன்றைய தேதிப்படி எம்ஜிஎம்முக்கு ரூ 4 பில்லியன் டாலர் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











