நவோமிக்கு 200 மணி நேர சிறை!

மேற்கத்திய உலகில் அழகுக்கான இலக்கணங்களைத் தகர்த்தெறிந்து நம்பர் ஒன் மாடலாக வலம் கொண்டிருப்பவர் கறுப்பழகி நவோமி.
கடந்த ஏப்ரல் மாதம் நவோமி லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது வழியில் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கிய போது தனது லக்கேஜ் தொலைந்து விட்டதாக அவர் புகார் செய்தார்.
ஆனால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்தனர் போலீசார். இதைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவோமி ஒரு கட்டத்தில் அவர்களைத் தாக்கியிருக்கிறார்.
தான் பயணித்த விமானத்தின் கேப்டன் மற்றும் ஊழி.யர்களையும் அவர் மிரட்டினாராம். உடனடியாக அங்கேயே கைது செய்யப்பட்ட நவோமி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் மீதான வழக்கு லண்டன் அக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த கையோடு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, நவோமிக்கு 200 மணிநேர சிறை தண்டனையும், 4500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த 200 மணி நேரத்தை அவர் சமூக சேவை செய்து கழிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த நவோமி தன் நடத்தைக்காக மிகவும் வருத்தம் தெரிவித்தார்.
அவரது செய்தியாளர் ஆலன் எட்வர்ட்ஸ் கூறுகையில், இந்தத் தண்டனையில் குறை காண ஏதுமில்லை. நடந்த விஷயம் வருத்தத்துக்குரியதுதான். நவோமியின் கேரியரை மனதில் கொண்டு சரியான தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி... என்றார்.


Click it and Unblock the Notifications











