ட்ரிம் ஆகும் பிரிட்னி

பாப் உலகின் சர்ச்சை நாயகியாக மாறி வருகிறார் பிரிட்னி. அடுத்தடுத்து அவரை சர்ச்சைகள் அட்டாக் செய்து வருவதால் நொந்து நூடூல்ஸ் ஆகி விட்டார் பிரிட்னி. முன்பெல்லாம் அழகு தேவதையாக, சிரிப்பு தேவதையாக வலம் வந்த பிரிட்னி இப்போதெல்லாம் கோப தேவதையாக மாறி வருகிறார்.
இந்த நிலையில், மனதை வருத்திய விஷயங்ளை மறந்து, புத்துணர்ச்சியுடன் கலக்க ரெடியாகிறார் பிரிட்னி. அதற்கு முதல் படியாக தனது உடலை ட்ரிம் ஆக்க உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
லாஸ் ஏஞ்செலஸில் உள்ள பேலி டோட்டர் பிட்னஸ் ஜிம்முக்குப் போக ஆரம்பித்துள்ளாராம் பிரிட்னி. மற்ற பெண்களோடு, பெண்களாக இவரும் தீவிரமாக டிரெட் மில் உள்ளிட்ட பயிற்சிகளில் வியர்க்க விறுவிறுக்க ஈடுபடுகிறார்.
மேலும் அந்த ஜிம்மின் உடற்பயிற்சி மற்றும் சத்துணவு நிபுணர்களை தனது தனிப்பட்ட பயிற்சியாளர்களாகவும் நியமித்து அவர்களுடைய ஆலோசனைப்படி நடந்து கொள்கிறாராம்.
கடந்த 3 வாரமாக அந்த ஜிம்முக்கு வந்து செல்கிறாராம் பிரிட்னி. சும்மா இல்லை, ஒரு நாளைக்கு மூன்று முறை வருகிறாராம்.
உடற்பயிற்சி மன வருத்தத்தைப் போக்கட்டும்.


Click it and Unblock the Notifications











