கை கோர்க்கும் ஜாக்கி - ஜெட்லி

ஜாக்கி சான் கலகலக்க வைத்துக் கொண்டிருந்த வேளையில் அறிமுகமானவர்தான் ஜெட் லி. இவருக்கும் தனி ரசிகர் வட்டாரம் உருவானது. இருவரும் அவரவர் பாதையில் அதிரடியாகப் போய்க் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் இருவரும் சேர்ந்து தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளனர். தி பர்பிடன் கிங்டம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம் 75 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ளது.
ஜெட்லியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருப்பதாகவும், அவர் நல்ல நண்பர் எனவும் சான் கூறியுள்ளார்.
ஜெட்லியோ அதை விட ஒரு படி மேலே போய், நண்பர்களாக ஆரம்பித்து இப்போது இருவரும் சகோதரர்களாகி விட்டோம் என்று நெகிழ்கிறார்.
இந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பு இப்போது வலுவடைந்து,மீண்டும் ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தை, ஜெட், ஜாக்கி மனதில் ஏற்படுத்தி உள்ளதாம்.
தி பர்பிடன் கிங்டம் ஏப்ரல் 8ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











