'எஸ்' ஆன ஏஞ்ஜெலீனா!

பிரான்ஸின் நைஸ் நகரில் உள்ள சான்டா மரியா மருத்துவமனையில் ஏஞ்செலீனா ஜூலிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்தது. அதில் ஆண் குழந்தைக்கு நாக்ஸ் லியான் எனவும், பெண்ணுக்கு விவியன் மெர்செலின் எனவும் பெயரிட்டுள்ளனர் ஜூலி - பிராட் பிட் தம்பதியினர்.
இந்த நிலையில், 19ம் தேதி காலை ஜூலி தனது குழந்தைகளுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தத் தகவல் அறிந்ததும் பத்திரிக்ைக புகைப்படக்காரர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
எப்படியும் ஜூலி வந்துதானே ஆக வேண்டும், அப்போது குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்கலாம் என அனைவரும் காத்திருந்தனர்.
ஆனால் அதிகாலை 4 மணிக்கே தனது குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து நைஸாக வெளியேறிச் சென்று விட்டார் ஜூலி. இதனால் காத்திருந்த புகைப்படக்காரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
அதிகாலை நேரத்தில் (அதாவது கருக்கலில்) ஒரு மினி பஸ் மூலம் ஜூலி தனது குழந்தைள், கணவர் பிட் ஆகியோருடன் வெளியேறி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையிலிருந்து ஜூலி, குழந்தைகளுடன் வெளியேறிய பிராட் பிட், நேராக காரன்ஸ் நகரில் உள்ள தனது ஆடம்பர பங்களாவுக்குச் சென்றார். அங்கு ஜூலி- - பிட் மற்றும் குட்டிப் பாப்பாக்களை, பிட் தம்பதியினரின் குழந்தைகளான மட்டாக்ஸ், பாக்ஸ், சஹாரா, ஷிலோ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











