பிரிட்னியின் கார் வேண்டுமா?

பிரிட்னியின் கார்களை விற்க கோர்ட் அனுமதி விட்டதால், அவர் உபயோகித்த கார்களை நல்ல விலைக்குத் தள்ளி விட முடிவு செய்துள்ளாராம் ஜெமி.
பிரிட்னி உபயோகித்த சில கார்களை விற்க அவரது தந்தை ஜெமி முடிவு செய்தார். ஆனால் பிரிட்னிக்கும், அவரது கணவர் கெவின் பெடர்லைனுக்கும் இடையே வழக்கு நடந்து வருவதால் கார்களை விற்க கோர்ட்டின் உதவியை நாடினார்.
லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள கோர்ட்டில் ஜெமி இதுதொடர்பாக மனு செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், கார்களை விற்கலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து பிரிட்னி உபயோகித்த சில பழைய கார்களை விற்கப் போகிறாராம் ஜெமி. ஆனால் என்ன மாதிரியான கார்களை அவர் விற்கப் போகிறார் என்பது குறித்த விவரத்தை ஜெமி தரப்பு வெளியிடவில்லை. கோர்ட்டும் அதுகுறித்துக் கூறவில்லை.
இதற்கிடையே, பிரிட்னி ஸ்பியர்ஸ், அவரது கணவர் கெவின் பெடர்லைனுக்கு வழக்கு செலவாக 3.75 லட்சம் டாலர் பணத்தை தருமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்னியும், கெவினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். தங்களது குழந்தையை யார் பராமரிப்பது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு நிலவுகிறது. கோர்ட் உத்தரவுப்படி தனது குழந்தையை பிரிட்னியிடமிருந்து கூட்டிச் செல்ல கெவின் சில மாதங்களுக்கு முன்பு பிரிட்னி வீட்டுக்குப் போனபோது பெரும் ரகளை ஏற்பட்டது. அதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரிட்னியின் செயலால் கெவினுக்கு தேவையில்லாமல் வழக்கு, செலவு என்று ஆகி விட்டதால் அதற்குரிய செலவுத் தொகையை பிரிட்னி தர வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
'நேரம் நல்ல நேரம்' என்று நிச்சயம் பிரிட்னியால் இப்போது பாட முடியாது.


Click it and Unblock the Notifications











