கர்ப்பம்.. சாண்ட்ரா டென்ஷன்!

மோட்டார் பைக் ஆர்வலரான ஜெஸி ஜேம்ஸை 2005ம் ஆண்டு மணந்தார் புல்லக். ஜேம்ஸின் மூன்று குழந்தகைளுக்கு தற்போது வளர்ப்புத் தாயாக உள்ளார்.
கல்யாணமாகி இத்தனை காலமாகியும் ஏன் புல்லக் இன்னும் ஜேம்ஸின் குழந்தைக்குத் தாயாகாமல் இருக்கிறார் என்று ஆங்கில மீடியாக்கள் அவ்வப்போது எழுதி வருகின்றன.
இதுகுறித்து தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார் புல்லக். இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது கர்ப்பப் பையின் தன்மை குறித்து மற்றவர்களுக்கு ரொம்பவே ஆர்வம் உள்ளதாக தெரிகிறது. நான் அவர்களைப் பற்றி ஏதாவது பேசுகிறேனா. இல்லையே, அப்படி இருக்கையில் என்னைப் பற்றி ஏன் இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
சுயநலமான தாயாக இருக்கக் கூடாது என்பதால்தான் நான் ஆரம்பத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தேன்.
எனக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும். குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையின் போக்கே மாறும் என்பது எனக்குத் தெரியும். பின்னர் ஜேம்ஸை சந்தித்தேன். அவர் மூலம் எனக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் கூட அவரது 3 குழந்தைகளுக்கு நான் நல்ல வளர்ப்புத் தாயாக உள்ளேன். அவர்களை எனது குழந்தைகள் போலத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் புல்லக்.


Click it and Unblock the Notifications











