மடோனா-ரிச்சி விவாகரத்து

இந்த தீர்ப்பைக் கேட்க மடோனாவும், ரிச்சியும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இருவரும் ஒருவருக்கொருவர் பணம் கேட்டு பிரச்சினை செய்ய மாட்டோம் என அளித்த உத்தரவாதத்தை ஏற்று நீதிதி கரோலின் ரீட் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.
இன்னும் 6 வாரங்களில் இருவரது விவாகரத்தும் இறுதி செய்யப்படும்.
50 வயதாகும் மடோனாவும், 40 வயதாகும் ரிச்சியும், கடந்த அக்டோபர் மத்தியில், பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ்ந்த காலம் எட்டு ஆண்டுகளாகும்.
2001ம் ஆண்டு இவர்களது திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
விவாகரத்துக்குப் பின்னர் இருவரும் தங்களது மகன்கள் ராக்கோ மற்றும் டேவிட் பாண்டா ஆகியோரை சேர்ந்து பார்த்துக் கொள்வார்கள்.
பிரிட்டிஷ் சட்டப்படி, மனைவியின் சொத்தில் கணவருக்கும் பங்கு உண்டு. ரிச்சியின் தற்போதைய சொத்து மதிப்பு 30 மில்லியன் பவுண்டுகள் ஆகும். மடோனாவுக்கோ 440 மில்லியன் பவுண்டு சொத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது மனைவியின் சொத்திலிருந்து எதுவும் வேண்டாம் என ரிச்சி கூறி விட்டதால், மடோனா, ரிச்சிக்கு எந்தப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து பெற்று விட்டாலும் கூட இரு மகன்களையும் தனித்துப் பார்த்துக் கொள்ளும் உரிமையைப் பெற இருவரும் இனி போராடுவார்கள் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











