குதிரையிலிருந்து விழுந்த மடோனா

ஹாம்ப்டன்ஸ் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. வார இறுதி நாளில் அவர் அங்கு குதிரையற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் கூட்டமாக வந்து குதிரையில் இருந்த மடோனாவை புகைப்படம் எடுக்க முயற்சித்த்னர்.
கேமராக்களின் பிளாஷ் ஒளியைப் பார்த்து மிரண்ட குதிரை அங்குமிங்கும் ஓடவே மேலே அமர்ந்திருந்த மடோனா தடுமாறி விழுந்து விட்டார்.
இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு விட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினார் மடோனா.
நம்ம ஊரைப் போல இல்லாமல், வெளிநாடுகளில் இந்த பாப்பராஸி புகைப்படக்காரர்களின் தொல்லை சற்று அதிகம். பிரபலங்களை எங்கு பார்த்தாலும் கேமராவால் சுட்டு விடுவார்கள்.
இவர்களின் விரட்டலால்தான் இளவரசி டயானா கார் விபத்தில் சிக்கி மாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
actress காயம் குதிரையேற்றம் சினிமா நடிகை பாடகி மடோனா ஹாலிவுட் cinema horse riding injured madonna singer


Click it and Unblock the Notifications