மெல் கிப்சன் வீட்டில் ஒரு தற்கொலை!

மெல் கிப்சனுக்கு சொந்தமாக உள்ள ஏராளமான இருப்பிடங்களில் ஒன்றான, லாஸ் ஏஞ்சலெஸ் வீடு ஒன்றில், இந்த தற்கொலை நடந்துள்ளது.
முதலில் போலீஸாருக்கு வந்த தொலைபேசி தகவலில், கிப்சனுக்கு சொந்தமான அந்த வீட்டில் ஒரு நபர் மாரடைப்பால் சிரமப்படுவதாக தெரிவித்தது. இதையடுத்து போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து சென்றனர்.
அங்கு சென்ற பிறகுதான் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜிப்சனின் பி.ஆர்.ஓ. கூறுகையில், சம்பவம் நடந்த இடம் ஜிப்சனுக்கு சொந்தமான இடங்களில் ஒன்றுதான் என்று மட்டும் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த பிற விவரங்களை லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











