மைக்கேல் ஜாக்சன் சீரியஸ்? - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மைக்கேல் ஜாக்சன், சில ஆண்டுகளாக மூச்சுக்குழாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை.
இந்த நிலையி்ல தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் முன்னாள் புலனாய்வு நிருபர் இயான் ஹால்ப்ரீன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அதற்கு அவரது உடல் நலம் ஒத்துக் கொள்ளாது என்பதால் அறுவைச் சிகிச்சை செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
50 வயதாகும் ஜாக்சனுக்கு ஆல்பா 1 ஆன்ட்டி டிரிப்சின் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது மரபனு கோளாறு ஆகும். இந்தக் கோளாறு ஏற்பட்டால் நிச்சயம் மரணம்தான் ஏற்படும். தற்போது அவரது பார்வையில் 95 சதவீதம் போய் விட்டது. பேச்சும் கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.
இந்த மரபணுக் கோளாறு அவருக்கு பல காலமாக உள்ளது. ஆனால் தற்போது அது மோசமடைந்துள்ளது.
இதுதவிர அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது அவரை மரணத்தில் கொண்டு போய் விடும் என டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜாக்சனுக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் பிரச்சினை, 5000 அமெரிக்கர்களில் ஒருவருக்கு வரக் கூடியது. அதை குணப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் மிகக் கடினமாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது லாஸ் வேகாஸ் நகரில் வைத்து ஜாக்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்குதான் அவரது ஆடம்பர வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாக்சனின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனால் அவரது சகோதரர் ஜெர்மைன் கூறுகையில், ஜாக்சன் நல்ல உடல் நிலையில் இல்லை. இது மோசமான கால கட்டம்தான். இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











