மைக்கேல் ஜாக்சனுக்கு இன்னொரு குழந்தை-புது தகவல்

By Staff

Michael Jackson
லண்டன்: மறைந்த பாப் மேதை மைக்கேல் ஜாக்சன் தொடர்பான சர்ச்சைகளில் புதிதாக, அவருக்கு 25 வயதாகும் உமர் பட்டி என்ற மகன் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டி, ஜாக்சன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்தார்.

நார்வேயில் வசித்து வருகிறார் பட்டி. இவர் ஒரு நடனக் கலைஞர் ஆவார்.

உமர் தனது மகன்தான் என்று 2004ம் ஆண்டு தனது தந்தையிடம் ஜாக்சன் ஒப்புக் கொண்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்தப் புதிய தகவல் வெளியானதும், தனது உண்மையான தந்தை ஜாக்சன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உமர் பட்டி முடிவு செய்துள்ளாராம்.

ஜூலை 7ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடந்த ஜாக்சன் நினைவாஞ்சலி கூட்டத்தில், ஜாக்சனின் சகோதரர்கள், சகோதரிகளுக்கு அடுத்து முதல்வர் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தார் உமர் பட்டி. இதையடுத்து அப்போதே பட்டி யார் என்ற கேள்வி எழுந்தது.

பட்டியின் தாயார் பியா மற்றும் அவரது கணவர் ரிஸ் ஆகியோர் ஜாக்சனிடம் முன்பு வேலை பார்த்தவர்கள் ஆவார். இந்தப் புதிய சர்ச்சை குறித்து இருவரும் எதுவும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்து பியா கூறுகையில், ஜாக்சன் பாப் உலகின் மன்னன். ஆனால் எங்களுக்கு அதற்கும் மேல் என்று மட்டும் கூறினார்.

ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை இல்லத்தில் பியா 1997ம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் வரை வசித்து வந்தார்.

பியா, ஜாக்சன் இல்லத்தில் ஆயாவாக வேலை பார்த்து வந்தவர் ஆவார். அவரது கணவர் ரிஸ், ஜாக்சனிடம் டிரைவராக இருந்தவர். பட்டிக்கு ரிஸ் தந்தை அல்ல வளர்ப்புத் தந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்சனின் மற்ற மூன்று குழந்தைகளான பிரின்ஸ், பாரிஸ், பிரின்ஸ் மைகேகல்-2 ஆகியோருடன், பியாவின் குழந்தையும், ஜாக்சனும் விளையாடுவது போன்ற வீடியோ படங்களும் உள்ளன.

2003ம் ஆண்டு ஜாக்சன் மீதான சிறார்களை ஓரினச்சேர்க்கைக்குப் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையின்போது நெவர்லேன்ட் இல்லத்தை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது பட்டியும் அங்கு இருந்தார்.

1996ம் ஆண்டு பட்டிக்கு 12 வயதாக இருந்தபோது துனீஷியாவில் வைத்து ஜாக்சனை அவர் சந்தித்தார். ஜாக்சனின் நடனம் தன்னைக் கவர்ந்து விட்டதாக அப்போது கூறினாராம் பட்டி. அதற்கு ஜாக்சன், நீ கூட சிறப்பாக ஆடுகிறாயே என்று பாராட்டினாராம்.

ஜாக்சனைப் போலவே சிறந்த நடனக் கலைஞராக உருவெடுத்துள்ளார் பட்டி. நார்வேயில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இவர் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

ஜாக்சன் குறித்து இன்னும் என்னவெல்லாம் வரப் போகிறதோ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X