பாலிவுட்டுக்கு வரும் ஜெஸிகா சிம்ப்ஸன்!

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் கென் பேவ்ஸ் -உடன் விரைவில் அவர் மும்பைக்கு வருகிறார். தி பிரைஸ் ஆஃப் பியூட்டி எனும் டாக்குமெண்டரி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஜெஸிகாவுக்கு, பாலிவுட் நடிகை நடிகை நேஹா தூபியா அழகுக் குறிப்புகளை தரவிருக்கிறாராம்.
இந்தத் தொடரில் அவர் புடவை கட்டி நடிக்கத் திட்டமிட்டிருப்பதால், எப்படி புடவை கட்ட வேண்டும் என்பதை 'டாப்லெஸ் புகழ்' நேஹா தூபியாதான் கற்றுத் தரப்போகிறாராம்!
அதுமட்டுமல்ல, ஷூட்டிங்குக்காக இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்பதால், இந்திய உணவு வகைகள் பற்றியும் அவர் முழுமையாகத் தெரிந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.
மும்பையில் தான் தங்கியிருக்கும் நாட்களில் இங்கு நடக்கும் பேஷன் ஷோக்கள் மற்றும் இதர சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஆசைப்படுகிறாம்.
இதற்கு முன், மும்பை திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு மிகப்பெரிய பார்ட்டி தரப்போகிறாராம் மும்பை ஓட்டலில்.
இந்தியர்கள் பற்றி தெளிவாத்தான் புரிஞ்சி வச்சிருக்காங்க!


Click it and Unblock the Notifications











