சிரபுஞ்சி போகும் ஜூலியா!

By Staff

Julia Roberts
படப்பிடிப்புக்காக இந்தியா வந்துள்ள ஜூலியா ராபர்ட்ஸ், தனது அடுத்தகட்ட படப்பிடிப்பை சிரபுஞ்சியில் வைக்கவுள்ளார்.

இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் ஜூலியாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் குளிர் கொஞ்சும் சிரபுஞ்சிப் பகுதியில் மீதமுள்ள ஷூட்டிங்கை மேற்கொள்ளலாம் என ஜூலியா ஆலோசனை சொல்லியுள்ளாராம்.

ஜூலியா நடிக்கும் ஈட், பிரே, லவ் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் நடந்து வருகிறது. இதற்காக இந்தியாவில் முகாமிட்டுள்ளார் ஜூலியா.

படத்தின் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை டெல்லி அருகே உள்ள ஆஷ்ரம் ஹரி மந்திர் என்ற இடத்தில் வைத்து படமாக்கி வருகின்றனர்.

அடுத்து சிரபுஞ்சி போகவுள்ளனராம். ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதி சிரபுஞ்சி. இதனால் இந்தப் பகுதி எப்போதும் ஜில்லென்று காணப்படும். தற்போது டெல்லி பகுதியில் வெயில் அடித்து வருவதால் சற்றே அசவுகரியமாக உணரும் ஜூலியா, சிரபுஞ்சியில் மீதமுள்ள ஷூட்டிங்கை வைக்குமாறு ஆலோசனை கூறியுள்ளாராம்.

படத்தின் இயக்குநரும் சிரபுஞ்சியில் பெய்யும் மழைப் பின்னணியில் படப்பிடிப்பு நடத்த ஆசைப்படுகிறாராம். எனவே தற்போது டெல்லி அருகே நடந்து வரும் ஷூட்டிங் முடிந்தவுடன் அத்தனை பேரும் சிரபுஞ்சி கிளம்பிச் செல்கின்றனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X