முதலிடத்தில் மடோனா!

அமெரிக்க பாப் தேவதை மடோனாவின் லேட்டஸ்ட் ஆல்பம் ஹார்ட் கேன்டி. இது மடோனாவின் 11வது இசை ஆல்பமாகும். இதில் 4 மினிஸ்ட் என்ற பாடல், இங்கிலாந்தின் டாப் 10 பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது.
மடோனா தனியாக பாடிய பாடல் இது. இந்த பாடலுக்கு ஜஸ்டின் டிம்பர்லேக் இடம்பெற்று நடித்துள்ளார்.
இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கன் பாய் என்ற பாடல் 2வது இடத்திற்கு பின்னேறியுள்ளது.
பாப் உலக வரலாற்றில் மடோனாவின் பாடல் ஒன்று முதலிடத்திற்கு வருவது இது 13வது முறையாகும்.
இருப்பினும் மடோனாவின் ஆல்பத்திற்கு முதலிடம் கிடைக்கவில்லை. அந்தப் பெருமை கோங்க் என்ற ஆல்பத்திற்குக் கிடைத்துள்ளது. கூக்ஸின் ஆல்பம் இது. 2வது இடத்தில் லியோனா லூயிஸின் ஸ்பிரிட் இடம் பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications